கல்வித்துறை-அறிவாலயம்-ஒன்றியம்


ஒன்றியத்தின் அனுசரணையுடன் கல்வித்துறை-அறிவாலயத்தினால்

ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றுலா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட திகதியில் காலநிலை ஒத்துழைக்காத போதிலும்

Tønsberg கடற்கரைவரை பேருந்துப் பயணம் செய்து கடற்கரை

விளையாட்டு, உணவு களியாட்டத்தினைச் செவ்வனே நிறைவு

செய்துள்ளது.பங்கு பற்றிய மாணவர்களும் பெற்றோரும் மிகுந்த

குதூகலத்துடன் காணப்பட்டனர். Tønsberg Verdens ende அழகு

மிகுந்த வனப்பான கடற்கரை.சுற்றுலாவின் ஒரு பகுதியாக இதன்

அழகைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு அனைவரும்

சந்தோசப்பட்டேயாக வேண்டும்.

கல்வித்துறை-அறிவாலயம்-ஒன்றியம்

சுற்றுலாத் திகதி தவிர்க்க முடியாத காரணங்களினால்

19.06.2010 சனிக்கு மாற்றப்பட்டுள்ளது.


கருத்தரங்கு

கல்வித்துறை நிர்வாகம் கல்வி கற்கும் மாணவர்களின் நலன்

கருதி நோர்வேயில் தாய்மொழிக்கல்வி சம்பந்தமான

கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
உரைஞர்: திரு.நாகரட்ணம்
காலம்: 29.05.2010 காலை 11.00 மணி
முக்கிய விடயமாக தாய்மொழிக்கல்வியை நோர்வேயிய

பாடத்திட்டத்தின் பெறுபேறுகளுடன் பயனுள்ளதாக்குவதான

விடயம் இடம் பெற்றது.

 

கல்வித்துறை-2010


அறிவித்தல்

நடப்பாண்டிற்கு தமிழ் அறிவாலயத்தின் அதிபராக தொடர்ந்தும்

திருமதி கலைவாணி தனபாலன் அவர்கள் நிர்வாகத்தினாலும் உப அதிபராக

திருமதி நிரஞ்சலா சதீஸ் அவர்கள் கல்வித்துறையினாலும் தெரிவு

செய்யப்பட்டுள்ளார்கள்.கல்வித்துறையானது நிர்வாகச் செயற்பாடுகளின்

தேவை கருதி கல்வித்துறைச்செயலர் தங்கவேல், அதிபர் கலைவாணி,

நிர்வாக உறுப்பினர் சிவகுமார், உப அதிபர் நிரஞ்சலா உள்ளடங்கிய

நிர்வாக அமைப்பாகின்றது.


கல்வித்துறை அறிவித்தல்

நடப்பாண்டில் புகைப்படக்கலை வகுப்புடன் ஆரம்பித்து

Computer,Mamut Program போன்ற

வகுப்புக்களை நடாத்துவதற்கு கல்வித்துறை தீர்மானித்துள்ளது.

இந்த வகுப்புக்கள் தொடர்பான விபரங்களும் விளக்கங்களும்

பின்னர் அறியத்தரப்படும்.


மாணவர்களின் பொதுஅறிவினை விருத்திசெய்யும் முகமாக

விழாக்களின் போது Milloaær,Smart Smater Smrtest

2010 திறமைக்;குப்பரிசு போன்ற நிகழ்ச்சிகளையும் இவ்

நிகழ்ச்சிகளுக்கான தயாரிப்புக்களில் மாணவர்கள்

பங்குகொள்ளும் வகையிலும் வேலைத்திட்டம் ஒன்றை

உருவாக்குவதற்கு எண்ணியுள்ளோம்.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித்துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு

கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


10 வது ஆண்டு நிறைவு 2007

10 வது ஆண்டு நிறைவு மலர்